Health

கருவுற்ற உடன் மாத்திரைகள் எடுத்து கொள்ளலாமா?

கரு ஆரோக்கியமாக வளர வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சரிவிகிதமாக தேவை.

இதற்கான உணவை திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும் என்பதோடு அவை ஏற்கனவே குறைபாட்டில் இருந்தால் போதுமான அளவு உடலில் சேராது. அதனால் மருத்துவரின் கூற்றுப்படி மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.

சரிவிகித உணவு மட்டுமே கரு ஆரோக்கியத்துக்கு போதுமானதாக இருக்காது.

ஃபோலிக் அமிலம், கால்சியம்., இரும்பு போன்ற வைட்டமின்கள் கருவின் சரியான வளர்ச்சிக்கு உதவுவதோடு பிறப்பு குறைபாடுகளை தடுக்கவும் உதவுகின்றன.

சிறந்த மல்டி வைட்டமின் அல்லது தொடர்ச்சியான வைட்டமின்கள் என்ன தேவை என்பதை மருத்துவரே கண்டறிவார் என்பதால் மருத்துவரிடம் ஆலோசித்து எடுத்துகொள்வது நன்மை பயக்கும். அதே போன்று மாத்திரைகளின் காலம் அளவு குறித்தும் கேட்டு அதன் படி மட்டுமே எடுக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாக எடுக்க கூடாது. அதே போன்று மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரைகளும் எடுக்க கூடாது.

அது மட்டும் இல்லை, கர்ப்பிணிக்கு தடுப்பூசி போட கூடாது என்னும் தவறான நம்பிக்கை பலரிடத்தில் உண்டு. ஆனால் கர்ப்பகாலத்தில் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும்.

ஊசி என்பது நேரடி வைரஸ் கிடையாது. இந்த தடுப்பூசி போடுவதால் காய்ச்சல் உண்டாகாது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் ஏற்பட்டால் கர்ப்பமாக இல்லாத மற்ற பெண்களை விட கடுமையான பக்கவிளைவுகளின் ஆபத்து அதிகமாக இருக்கும். அதனால் கர்ப்பிணி தடுப்பூசி போடுவது கருவையும் பாதுகாக்க செய்யும்.

கருவுற்ற உடன் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும்

கருவுற்றதை உறுதி செய்த உடன் மகப்பேறு மருத்துவரை மட்டும் சந்தித்தால் போதாது. பல் மருத்துவரையும் சந்திக்க வேண்டும். வாய்வழி மோசமான சுகாதாரம் பாக்டீரியா பரவுவதற்கும் தொற்றுக்கும் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்கன் மகப்பேறு மருத்துவ கல்லூரி கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்பத்தில் பல் பல் சுத்தம் செய்வதோடு தேவையெனில் வாய்வழி சுகாதார மதிப்பீடும் செய்வது அவசியம் என்கிறது. அதனால் கர்ப்பகாலத்தில் பல் மருத்துவரை சந்திப்பதும் அவசியம்.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *