Health

 கருவுற்றதில் இருந்தே குழந்தைக்கு உற்பத்தியாகும் உணவு! கர்ப்ப கால சுவாரஷ்யம்

பிரசவத்துக்கு முன் மார்பகத்தில் மஞ்சள் நிற திரவம் கருவுற்ற காலத்திலேயே வெளியேற கூடும்.

இது கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது. பால் சுரப்புக்கு முன்பு மார்பகத்தில் இருந்து வரக்கூடிய குழந்தையின் முதல் ஊட்டச்சத்து இது.

இந்த கொலஸ்ட்ரம் என்னும் மஞ்சள் நிற பாலானது கருவுற்ற 14 வது வாரத்தில் இருந்தே உற்பத்தி ஆக கூடும். கருவுற்ற துவக்கத்தில் குழந்தை உணவு உற்பத்தி செய்யப்படுவது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.

கர்ப்பகாலத்தில் மார்பக கசிவு சங்கடமாக இருந்தாலும் இது சாதாரணமானது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் இந்த கொலஸ்ட்ரம் என்னும் தெளிவான திரவம் குழந்தையின் உணவை ஆரோக்கியமாக தயார் செய்வதற்கான அறிகுறியாகவே உணரலாம்.

ஏனெனில் இவைதான் குழந்தைக்கு தேவையான செரிமானத்துக்கு உதவும். இது புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவு. இதில் சர்க்கரை அளவும் குறைவு. குழந்தை எவ்விதமான நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல் காக்கும் ஆன்டிபாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்ப்பகாலத்தில் எல்லா பெண்களுக்கும் மார்பகத்தில் கசிவு இருக்கும் என்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். சில பெண்களுக்கு இரண்டாவது ட்ரைமெஸ்டரில் மார்பக கசிவு இருக்கலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது. எனினும் கர்ப்பத்தின் 12 அல்லது 14 வது வாரங்களில் அதாவது முதல் ட்ரைமெஸ்டர் காலங்களிலும் மார்பகங்களில் கசிவு உண்டாக கூடும்.

இறுதி மூன்றாவது மாதங்களிலும் இவை உண்டாக கூடும். பிரசவக்காலம் நெருங்கும் போது இந்த கசிவு அதிகரிக்கவும் செய்யும்.

சிலருக்கு பிரசவத்துக்கு பிறகு இந்த கசிவு இல்லாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இது குறித்து கர்ப்பிணி பெண் கவலை கொள்ள தேவையில்லை. இன்னும் சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகும் மார்பகத்தில் கசிவு இருக்காது. இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவையாக இருக்கும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *