Health

ஒரு முனையில் இணைக்கப்பட்ட தசை

மனித உடலில் நாக்கு ஒரு தனித்துவமான தசையாக திகழ்கிறது. ஏனெனில் இது ஒரு முனையில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

தசைகள் பொதுவாக இரு முனைகளிலும் எலும்புகளுடன் இணைக்கப்பட்டு காணப்படும்.

ஆனால் மற்ற தசைகளைப்போல் அல்லாமல், நாக்கு வாயின் பின்புறத்தில் மாத்திரம் இணைக்கப்பட்டு பல்வேறு திசைகளில் சுதந்திரமாக நகர கூடியவாறு உள்ளது.

இந்த வடிவமைப்பு நாக்கின் நெகிழ்வுத்தன்மையையும் இயக்க வரம்பை அதிகரிக்கவும் அனுமதிக்கிறது. பேச்சு, விழுங்குதல் மற்றும் சுவை உணர்தல் போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.

நாக்கு எட்டு வெவ்வேறு தசைகளால் ஆனது. அவை இந்த சிக்கலான பணிகளை தடையின்றி செய்ய ஒன்றாக வேலை செய்கின்றன.

அதன் வடிவம், அளவு மற்றும் நிலையை மாற்றவும் தகவல் தொடர்புகளை பேணவும் செரிமானத்திற்காகவும் முக்கிய உறுப்பாக அமைகிறது. வாயின் பின்பகுதியில் உள்ள ஹையாய்டு எலும்பில் உள்ள நாக்கின் ஒற்றை இணைப்பு புள்ளியே அதன் சிக்கலான இயக்கங்களை மேற்கொள்கிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *