Health

ஒரு நாளைக்கு  5 மணிநேரம் தான் தூங்குவீங்களா? ஜாக்கிரதை

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

இந்த அளவு தூக்கத்தை கட்டாயம் ஒருவர் பெற வேண்டும்.

இப்போது தினமும் போதுமான தூக்கத்தைப் பெறாமல் இருந்தால் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

உடல் சோர்வை உணர நேரிடும். அதோடு சிறு விஷயங்களுக்கும் எரிச்சலடையக்கூடும்.

ஒருவர் தினமும் குறைவான அளவில் தூக்கத்தை மேற்கொண்டால், அதன் விளைவாக எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை செலுத்த முடியாமல் போகும்.

தூக்கம் குறைவாக இருக்கும் போது, உடல் சோர்வடைந்து, மூளை திறம்பட செயல்படாது.

சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், மூளையில் உள்ள மனநிலையை கட்டுப்படுத்தும் ரசாயனம் பாதிக்கப்படுகிறது.

இதன் விளைவாக மனதை ஒருமுகப்படுத்த முடியாமல், மனமானது எதிலும் நாட்டம் இல்லாமல் அலைபாயும்.

தூக்கம் போதுமான அளவு கிடைக்காமல் போனால், உடலானது கிருமிகளை எதிர்த்துப் போராடும் செல்களை உற்பத்தி செய்யாமல் போகும். இதன் விளைவாக அடிக்கடி ஏதேனும் ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

தூக்கம் இன்மை அதிக பசியுணர்வுகளை  தூண்டி உடல் எடையை அதிகரிக்கும்.

தூக்கம் குறையும் போது, பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் போவதோடு, அப்பிரச்சனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *