Health

உடல் துர்நாற்றத்தை உடனே ஓட விடும் 3 உணவு பொருட்கள் 

உடல் துர்நாற்றத்தை போக்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன்  வைத்திருக்கு மூன்று உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தக்காளி சாறு

தக்காளி சாறு  தோலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது. தக்காளிச் சாற்றினை தூய துணியால் நனைத்து அக்குளில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இதனால் வியர்வை குறைந்து உடல் துர்நாற்றம் நீங்கும்.

கல் உப்பு

வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை  கல் உப்பு நீக்குகிறது.  குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு படிகங்களை சேர்க்கவும். தண்ணீரில் முற்றிலும் கரைக்கும் வரை கலக்கவும். அதன் பிறகு குளித்த பின் துர்நாற்றம் வராது.

எலுமிச்சை

உடல் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைக்கிறது. எலுமிச்சையை பாதியாக வெட்டுங்கள். அவற்றைக் கொண்டு அக்குள்களை மசாஜ் செய்யவும். இதனால் துர்நாற்றம் குறையும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தடவி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவி வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *