Health

இன்று உலக இட்லி தினம்! மணக்க மணக்க ருசிக்கலாம்

எத்தனை வகை உணவு இருந்தாலும் நாம் ருசிக்கும் இட்லிக்கு ஈடாகாது. சாப்பிடும் முன்பே அந்த வாசனை மூக்கில் நுழைந்து சாப்பிட தூண்டும்.

நம்முடைய உணவு பழக்கத்தில் இந்த இட்லி மட்டும் முடிசூடா மன்னன் போல் காலம் காலமாக இருக்கிறது.  எத்தனையோ உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டும்.

ஆனால் தினந்தோறும் இட்லியையே சாப்பிட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை.

காரணம் அரிசி, உளுந்தை தவிர எண்ணெய், காரம் என்று எந்தவிதமான பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல, நீராவியில் வேக வைப்பது.

அரிசி 400 கிராம், உளுத்தம்பருப்பு 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் இரண்டையும் கலந்து தேவையான அளவில் உப்பு போட்டு 3 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான். இட்லி மா தயார்.

இட்லி பிறந்த இடம் இந்தோனேஷியா என்கிறார்கள்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டை ஒரு இந்து மன்னன் ஆண்டதாகவும், அவனது ஆட்சியில்தான் இந்த உணவு அறிமுகமாகி பரவியது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

காலப்போக்கில் இட்லியிலும் பல வகைகள் வந்து விட்டன. கார் இட்லியில் துவங்கி குஷ்பு இட்லி, குட்டி இட்லி என்று பல வகைகள் வந்து விட்டன. சாம்பாருக்குள் இட்லியை மிதக்க விட்டால் சாம்பார் இட்லி, இட்லி மீது பொடியை தூவினால் பொடி இட்லி… இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உணவின் அரசனாக இருக்கும் இட்லி ஒவ்வொரு பெயரில் தயாராகிறது.

இட்லி தினமான இன்று  இட்லியை சாப்பிட்டும், கொண்டாடியும் மகிழ்வோம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *