Health

இந்த சக்திவாய்ந்த உணவுகளை சாப்பிடுங்கள்! நீர்ச்சத்து குறையவே குறையாது

இலங்கையர்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வெப்பமான காலநிலையில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.

தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பவர்களுக்கு சரும பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.

இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றுவதன் மூலம் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும்.

சாதாரண நீரைக் குடிக்க முடியால் இருந்தால், நீரேற்றமாக இருக்க  உணவுகளைச் சேர்க்கலாம். அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி  தெரிந்துக் கொள்ளலாம்.

பால்

நம் உடலில் தண்ணீர் சேர்க்க பால் சிறந்த உணவு. உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், உங்கள் உணவில் பால் சேர்ப்பது நன்மை பயக்கும். உடற்பயிற்சிக்குப் பிறகு தண்ணீருக்குப் பதிலாக ஒரு கிளாஸ் பால் குடிப்பது புத்துணர்ச்சியைத் தரும்.

தயிர்
தயிரில் நமது உடலுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது பல வழிகளில் நமது ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.

தர்பூசணி
தர்பூசணியில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் இன்றி, அதிக தண்ணீர் இருப்பதால், இதில் குறைவான கலோரிகள் உள்ளன. எனவே நீங்கள் தர்பூசணியை எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு குறைவான கலோரிகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், உங்கள் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. இந்த அற்புதமான வெள்ளரிக்காயை பச்சையாகவே சாப்பிடலாம், அல்லது சூப் அல்லது ஜூஸாக கூட செய்யலாம்.

தக்காளி
தக்காளி லைகோபீன் நிறைந்த காய்கறி என்பதால் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல் உங்கள் தோல் மற்றும் கண்களுக்கும் சிறந்தது. நீங்கள் ஏற்கனவே இந்த நீர் நிறைந்த உணவை பல்வேறு வழிகளில் சாப்பிடலாம். இதை பச்சையாக அல்லது ஜூஸாக சாப்பிடலாம். அதில் சிறிது மிளகுத் தூள், உப்பு சேர்த்து சாலட் செய்தும் சாப்பிடலாம்.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *