Countries

மாட்டின் சாணத்தை சன் ஸ்கிரீன் கிரீமாக பயன்படுத்தும் விசித்திர மக்கள்

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் பசுக்கள் வெளியேற்றும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீன் கிரீமாக பயன்படுத்துகின்றனர்.

தெற்கு சூடான் நாட்டில் அன்கோல் வதுசி என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் 8 அடி உயரம் வரை வளரக்கூடியவை.

இந்த வகை மாடுகள் முண்டாரி எனப்படும் பழங்குடியின மக்களிடம் அதிகம் உள்ளது.

இதனை அவர்கள் தங்களுடைய கௌரவ சின்னங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பசுக்களை பாதுகாப்பதற்காக பழங்குடியின மக்கள் ஆயுதங்களை வைத்துள்ளனர்.

இதற்கு அதன் விலை அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும்.

பழங்குடியின மக்களிடையே நடக்கும் திருமணங்களின் போது வரதட்சணை பொருளாக இந்த அன்கோல் வதுசி இன மாடுகள் வழங்கப்படுகின்றன என்பதும் அடுத்த ருசிகர தகவல்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *