Countries

அமெரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொவிட் ! எச்சரிக்கை மக்களே

கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்று வரை அது உருமாற்றமடைந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போது அமெரிக்காவில் ஓமிக்ரானின் JN.1 வம்சாவளியைச் சேர்ந்த FLiRT வேகமாக பரவி வருகிறது.

முக்கியமாக இந்த வகை மாறுபாடு அமெரிக்காவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் கொரியா போன்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

அத்தோடு இந்த வகை முந்தைய ஓமிக்ரான் வகையைக் காட்டிலும் அதிகம் தொற்றக்கூடியதாக கருதப்படுகின்றன.

என்ன தான் கொரோனா வைரஸில் பிறழ்வுகள் ஏற்பட்டாலும், அதன் அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, FLiRT மாறுபாடு இதுவரை பரவிய மாறுபாடுகளைப் போன்றே வேகமாக தொற்றக்கூடியதா மற்றும் ஆபத்தானதா என்பதை அறியும் முயற்சிகள் இன்னும் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

WebMD-ன் கூற்றுப்படி, இந்த வகை மாறுபாட்டின் ஸ்பைக் புரதத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், இது மற்ற வகை மாறுபாட்டைப் போலவே மக்களை வேகமாக தாக்கி, அவர்களின் நிலைமையை மோசமடையச் செய்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

அதுவும் அமெரிக்காவில் வயது வந்தவர்களில் 22 சதவீதம் மக்கள் சமீபத்தில் கோவிட் தடுப்பூசியை பெற்றுள்ளதால், அவர்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுவும் சமீபத்தில் பூஸ்டர் ஊசியைப் பெற்றவர்கள் கூட இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட நிறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொவிட் FLiRT மாறுபாட்டின் அறிகுறிகள்

  1. காய்ச்சல்
  2. வாசனை மற்றும் சுவை இழப்பு
  3. உடல் வலி
  4. தொண்டை வலி
  5. நெஞ்சு நெரிசல்
  6. மூக்கு ஒழுகல்
  7. வாந்
  8. இருமல்
  9. மூச்சுத்திணறல்
  10. உடல் சோர்வு

செரிமான பிரச்சனைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், இந்த வகை மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உடனே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *