Beauty

முடி உதிர்வை விரட்டும் ஹேர் பேக்

முடியை பாதுகாத்துக் கொள்ள ஒரு சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்
  2. தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  3. பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்
  4. கற்றாழை – 50 கிராம்

செய்முறை

இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கற்றாழையை சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும்.

மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *