Beauty

நரைமுடியை கருப்பாக மாற்றும் சக்திவாய்ந்த இலை! எப்படி பயன்படுத்தலாம்?

நரைமுடியை கருப்பாக மாற்ற கறிவேப்பிலை இலை ஒன்று போதும்.

அதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. கறிவேப்பிலை- 1 கைப்பிடி
  2. தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
  3. வேப்ப இலை- 1 கைப்பிடி
  4. வைட்டமின் ஈ கேப்சூல்கள்- 2
  5. தயிர்- 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்துக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை சிறிது சூடாக்கி ஆறிய பின் கறிவேப்பிலை மற்றும் வேப்ப இலை கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, தலைமுடியை சரியாகக் கழுவி உலர வைக்கவும்.

பின் முடி மற்றும் உச்சந்தலையில் தயார் செய்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *