Beauty

செலவே இல்லாம மஞ்சள் பற்களை பளிச்சுனு மாத்தணுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்

எம்மில் பலருக்கு பற்கள் எப்போதும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பற்களை வெண்மையாக வைத்திருக்க, பல்லாயிரம் ரூபாய் செலவழித்து விலையுயர்ந்த பற்களை வெண்மையாக்கும் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையிருக்கும்.

இது எதுவும் இல்லாமல் முத்து போன்ற வெண்மையான பற்களைப் பெற தேங்காய் எண்ணெய் எப்படி உதவும் என்று பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து வாயில் ஊற்றி வாயைச் சுற்றி 15-20 நிமிடங்கள் கொப்பளிக்கவும்.

சிறிது நேரம் கழித்து அதை துப்பி விட்டு, வாய் கொப்பளித்துக் கொள்ளவும்.

இந்த முறை பிளேக்கை அகற்ற உதவுகிறது. எண்ணையை வாயில் சுத்தும்போது அனைத்து பாக்டீரியாக்களும் எண்ணெயில் குவிந்து, துப்பும்போது அகற்றப்படும்.

மேலும், தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுவதால், பல் சிதைவிலிருந்து பற்களைப் பாதுகாத்து பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கவும் இது உதவுகிறது.

ஒவ்வொரு நாளும் சரியாக இந்த முறைகளை பின்பற்றினால், நல்ல மாற்றங்களை காண முடியும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *