Beauty

ஆண்களே! ஜீன்ஸ தூக்கி வீசிட்டு காட்டன் துணி உடுத்துங்க! இவ்வளோ நன்மை இருக்கு

பேஷன் என்ற பெயரில் நம் நாட்டின் வெப்ப நிலைக்கு ஒத்துபோகாத உடைகளை உடுத்த ஆரம்பித்துவிட்டோம். பருத்தி என கூறப்படும் காட்டன் துணியானது  வெட்ப நிலைக்கு சரியாக பொருந்தும் உடையாகும்.

இது, வெயில், குளிர் என இரண்டு காலங்களிலும் உடுத்தலாம். அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.

காட்டன் நூலிழைகள் கற்று புகும் தன்மை கொண்டவை என்பதால் எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். இதனால், கடும் வெயிலிலும் வெப்பம் குறைந்து உணரப்படும்.

காட்டன் துணியின் மிக சிறந்த நன்மை என கருதப்படுவது, வியர்வையை உறிஞ்சும் தன்மை.

காட்டன் உடைகள் வெயில் மற்றும் குளிர் என இரண்டு காலங்களிலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. வெப்பத்தை குறைப்பதனால், கோடை சரும பிரச்சனைகள் ஏற்படாமல் உங்கள் சருமத்தை காக்கிறது.

மற்ற உடைகள் அணியும் போது உங்கள் சருமதிற்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அதும், கோடையில் கட்டாயம் சரும ஒவ்வாமை ஏற்படும். காட்டன் துணி உடுத்துவதால் சரும ஒவ்வாமைகள் ஏற்படாது.

உடுத்த மிகவும் வசதியான உடை காட்டன் ஆகும். மற்ற உடைகளை போல அசௌகரியம் இல்லாமல் இருக்கும்.

சில வகை துணிகள் ஓரிரு முறை அல்லது ஓரிரு மாதங்கள் பயன்படுத்திய பிறகு நிலை மாற்றமடைந்துவிடும். சுருங்குவது, ஏற்ற இறக்கமாக, அங்கும் இங்கும் இழுத்தவாறு இருக்கும். ஆனால், பருத்தி உடைகள் அவ்வாறு ஆகாது.

இதனால், நாகரீக உடைகளை வீசி விட்டு கலாச்சார உடைகளுக்கு மாறுங்கள். அது தான் ஆரோக்கியமும் கூட.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *