ArticleHealth

ஒரே ஒரு கப் ரவை வைத்து சுவையான நொறுக்கு தீனி செய்யலாம் வாங்க

வீட்டில் இருக்கும் ரவையை வைத்து சுவையான நொறுக்கு தீனி செய்யலாம்.

இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இந்த நொறுக்கு தீனி 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

இனி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. ரவை – 1 கப்
  2. கசூரி மெத்தி – 1/2 டீஸ்பூன்
  3. உப்பு – சுவைக்கேற்ப
  4. மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
  5. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
  6. தண்ணீர் – சிறிது

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் சேர்த்து ஸ்பூன் கொண்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடேற்றி ஊற்றி, ஸ்பூன் கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி சற்று தளர்வாக பிசைந்து கொண்டு, 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
30 நிமிடம் கழித்து, மாவை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து, ஒரு முட்கரண்டியின் அடிப்பகுதியில் வைத்து பரப்பி அப்படி உருட்டி விட வேண்டும்.
அப்படி உருட்டும் போது முட்கரண்டியின் அச்சானது மாவில் விழுந்து, ஒரு அழகான தோற்றத்தைத் தரும். இதேப் போல் அனைத்து மாவையும் உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்தித்தினை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரவா ஸ்நாக்ஸ் தயார்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *